சொல் பொருள்
(பெ) 1. விருப்பம், 2. பேணுதல்,
சொல் பொருள் விளக்கம்
1. விருப்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire, longing, fostering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன் நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறும் மலர் அகல் மார்பின் மை படி குடுமிய குல வரை சிலவே – பரி 15/6-10 இந்த நிலவுலகிற்கு உதவும் வகையில் பல பயன்களைத் எல்லாம் எப்பொழுதும் தந்து நிலையாக அமைந்து விளங்கும் மலைகள் சிலவே! அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும் மலர்களையுடைய அகன்ற பகுதிகளையுடைய மேகங்கள் படியும் உச்சிகளையுடைய குலமலைகள் சிலவே! முற்றிய திருவின் மூவராயினும் பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/1,2 நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் எம்மைப் பேணுதல் இன்றி ஈதலை யாங்கள் விரும்பேம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்