சொல் பொருள்
(வி) 1. அளவு அல்லது எண்ணிக்கையில் மிகு, அதிகமாகு, 2. வளர்ச்சியடை, முன்னேற்றம்காண்,
சொல் பொருள் விளக்கம்
1. அளவு அல்லது எண்ணிக்கையில் மிகு, அதிகமாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
increase, multiply, improve, augment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோயும் பெருகும் மாலையும் வந்தன்று – நற் 397/5 காதல்நோயும் அதிகமாகின்றது; மாலைக்காலமும் வந்துவிட்டது; மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் முட்டா சிறப்பின் பட்டினம் – பட் 216-218 மொழிகள் பல மிகுந்த குற்றமற்ற (பிற)தேசங்களிலே (தத்தம்)நிலத்தைக் கைவிட்டுப்போந்த மக்கள் கூடி மகிழ்ந்து இருக்கும், குறைவுபடாத சிறப்புகள் கொண்ட – பட்டினம் இரவல் மாக்கள் சிறுகுடி பெருக உலகம் தங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை – பதி 59/7-9 இரந்துண்ணும் மக்கள் வாழும் ஊர்களில் வளம் சிறக்கும்படியாக உலகத்து உயிர்களைத் தாங்குகின்ற, மேம்பட்ட கல்வியறிவையுடைய வில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்