சொல் பொருள்
(பெ) திருநாள், விழாநாள், விழா,
சொல் பொருள் விளக்கம்
திருநாள், விழாநாள், விழா,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Festival; festive occasion;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் பெருநாள் அமையத்து பிணையினிர் கழி-மின் – பெரும் 291-296 துளி சொரிதலை ஒழிந்த, ஓங்கி உயர்ந்த பரந்த இடத்தையுடைத்தாகிய, அகன்ற பெரிய வானத்திடத்தே தோன்றும் குறை வில்(லாகிய வானவில்)லை ஒப்ப சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து (ஒன்றற்கொன்று நிறம்)மாறுபடும் (ஏனைப்)பூக்களும் மிக்க, நீண்டநாள் நீர்(இருக்கும்) பொய்கைகளில், பூப்பறிப்பார் உங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பல பூக்களையும், விழாக்கோலம் (கொண்டாற் போல)சூடியவராய்ப் போவீராக கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் தண் கடல் நாடன் ஒண் பூ கோதை பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ விழைவு கொள் கம்பலை கடுப்ப – மது 523-526 வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும், குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்