Skip to content

சொல் பொருள்

(பெ) பெரிய துறைமுகம்,

சொல் பொருள் விளக்கம்

பெரிய துறைமுகம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

large seaport

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/11

ஓடக்கோலும் மறையும் நீர்ப்பெருக்கையுடைய காவிரி கடலில் கலக்கும் பெரிய துறைமுகத்தில்

இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை
தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன – அகம் 152/6-8

ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானலம் பெருந்துறை என்னும் பட்டினத்தே
பொன்னைக் கொண்டுவரும் நல்ல மரக்கலம் சிதையுமாறு தாக்குகின்ற
சிறிய வெள்ளிய இறாமீனின் தொகுதி போன்ற

குடாஅது
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய – அகம் 199/18-20

மேற்கின்கண்ணதாகிய
பெரிய பொன்னினையுடைய வாகைமரம் நிற்கும் பெருந்துறை என்னுமிடத்து நிகழ்ந்த போரில்
பொற்பூண் அணிந்த நன்னன் என்பான் போரிட்டு களத்தில் மடிய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *