சொல் பொருள்
(பெ) 1. பெருமையுள்ளவன்(ள்), 2. பேரழகு
சொல் பொருள் விளக்கம்
1. பெருமையுள்ளவன்(ள்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Noble minded person, great beauty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 106,107 பெருமை பொருந்தின தலைமையினையுடைய மன்னனைத் தவிர (மற்ற)ஆண்கள் கிட்டே(யும்)வராத கடும் காவலையுடைய மனைக்கட்டுக்களின் விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோடு உண்டலும் புரைவது என்று – குறி 206,207 விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே, உன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்”, என்று கூறி, அப்பொழுது தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர் பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும் வருந்தினை – அகம் 59/1-3 குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற பெரிய அழகினை இழந்த கண்களையுடையவளாய்ப் பெரிதும் வருந்துகின்றாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்