சொல் பொருள்
1. (பெ.அ) பசந்த, வெளிறிய, 2. (த.ஒ.வி.மு) பையையுடையேன்
சொல் பொருள் விளக்கம்
பசந்த, வெளிறிய,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dim as twilight, I was having the bag
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகல்வாய் வானம் ஆல் இருள் பரப்ப பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு சினவல் போகிய புன்கண் மாலை – அகம் 365/1-3 அகற்சி வாய்ந்த வானத்தின்கண் மிக்க இருள் பரக்க ஞாயிற்றைப் போக்கிய பசந்த தோற்றத்துடன் சினத்தல் மிக்க துன்பத்தைச் செய்யும் மாலைக்காலத்தே பறையொடு தகைத்த கல பையென் – புறம் 371/5 பறையுடன் சேர்த்துக்கட்டிய மற்ற கலங்களையுடைய பையையுடையேனாய்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்