சொல் பொருள்
(வி) 1. தழை, செழி, 2. நிறை, 3. நெருங்கு, நெருக்கமாக இரு,
சொல் பொருள் விளக்கம்
தழை, செழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be luxuriant; prosper, thrive, flourish, be possessed of, filled; be thick, close or crowded
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 10 இருள் உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின் நுண் முள் வேலி தாதொடு பொதுளிய தாறு படு பீரம் ஊதி – நற் 277/6,7 நுண்மையான முட்களாலாகிய வேலியில் படர்ந்த, தாதுடன் செழித்துத் தழைத்த, கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பீர்க்கின் மஞ்சள் நிறப் பூவில் தேன்குடித்து, முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர் விதை குறு வட்டி போதொடு பொதுள பொழுதோ தான் வந்தன்றே – குறு 155/1-3 பழமையான தினைப்புனத்தை உழுத ஆரவாரம் மிக்க உழவரின் விதைகளை வைக்கும் சிறிய வட்டிகள், முல்லை மொட்டுக்களால் நிறைய கார்ப்பருவம் வந்துவிட்டது; பொம்மல் ஓதி பொதுள வாரி – அகம் 257/5 பொலிவுற்ற கூந்தலை நெருங்க வாரி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்