Skip to content
பொம்மல்

பொம்மல் என்பது திரட்சி, மிகுதி, சோற்றுக்குவியல், பெருமளவு சோறு

1. சொல் பொருள்

(பெ) 1. மிகுதி,  2. சோற்றுக்குவியல், பெருமளவு சோறு, 3. திரட்சியாகக் குவிக்கப்பட்ட உணவு, 4. பொங்குதல், 5. திரள், 6. தோற்றப் பொலிவு

2. சொல் பொருள் விளக்கம்

அடர்த்தியான, நீண்ட கூந்தல் உள்ளவர்கள் சில சமயங்களில் நீண்ட முடியைப் பந்துபோல் சுருட்டிக் கொண்டைபோட்டிருப்பார்கள். புலவர்களால் இது பொம்மல் ஓதி எனப்படுகிறது. ஓதி என்பது கொண்டை. பொம்மல் என்பது திரட்சி, மிகுதி.

ஒரு தட்டில் மிகுந்த அளவு சோற்றைக் குவித்து வைத்தால் அது பொம்மல் பெரும் சோறு எனப்படுகிறது.

பொம்மல்
பொம்மல்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Abundance, copiousness, abundant food, swelling, crowd, fineness of appearance

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு
கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/4-6

கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை
உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன்
கையகத்தில் ஏந்தி வாய் கொள்ள உண்டு,

இதுவே ஆகுபெயராகி, பொம்மல் என்றாலேயே திரட்சியாகக் குவிக்கப்பட்ட உணவு என்ற பொருள்தரும்.

பொம்மல்
பொம்மல்

பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 168,169

பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன்,
(மிகுந்த)நிறங்கொண்ட கண்போன்ற (பருக்கைகளாலான)தினைச்சோற்றுக் குவியலைப் பெறுவீர்

பொம்மல் படு திரை நம்மோடு ஆடி – நற் 96/4

பொங்கியெழுந்து முழங்கும் கடல் அலையில் நம்மோடு கடலிற்குளித்து

பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – நற் 272/3

திரளான அடும்பு படர்ந்த வெண்மையான மணலின் ஒருபக்கத்தில்,

பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/11

பொலிவுபெற்ற கூந்தலையுடையவள் பேரவாவினால் நடுங்கி வருந்துமாறு

பொம்மல் ஓதி என்ற தொடர் சங்க இலக்கியங்களில் 13 இடங்களில் காணப்படுகிறது.
இதற்கு, மிகுதியான, திரளான என்ற பொருள்களும் ஒத்து வருவன.

பொம்மல்
பொம்மல்

பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய – நற் 129/3

பொம்மல் ஓதி புனைஇழை குணனே – நற் 252/12

எம்மொடு வருதியோ பொம்மல்ஓதி என – நற் 274/6

பொம்மல்ஓதியை தன் மொழி கொளீஇ – நற் 293/7

பொம்மல் ஓதியும் புனையல் – குறு 191/6

பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/6

பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு – அகம் 65/8

பொம்மல் படு திரை கம்மென உடைதரும் – அகம் 200/8

நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி – அகம் 214/9

பொம்மல் ஓதி எம் மகள் மணன் என – அகம் 221/3

பொம்மல் ஓதி பொதுள வாரி – அகம் 257/5

பொம்மல் ஓதி நீவிய காதலொடு – அகம் 311/7

பொம்மல் ஓதி புனைஇழை குணனே – அகம் 353/23

எம்மொடு வருதியோ பொம்மல்ஓதி என – நற் 274/6

பொம்மல்ஓதியை தன் மொழி கொளீஇ – நற் 293/7

பொம்மல்
பொம்மல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *