சொல் பொருள்
பொய் – விளையாட்டுப் போல ஒன்றைச் செய்து விலகி விடுதல்.
வழு – உறுதிமொழி தந்து அவ்வுறுதியை வழுவி-விலகிப் போய் விடுதல்.
சொல் பொருள் விளக்கம்
திருமணச் சடங்குமுறை தோன்றுதற்கு அடிப்படையாக இருந்தவை மணமக்கள் வாழ்வில் பொய்யும் வழுவும் தோன்றியமையே எனச் சுட்டுகிறார் தொல்காப்பியர். சிறுமியர் கட்டும் சிறு வீடு ‘பொய்தல்’ எனப்படும். சிறு வீடு கட்டி விளையாடி அழிப்பது ‘போல் அழிப்பது பொய். வழுவி அல்லது குற்றம் செய்து நழுவிச் செல்லுதல் வழு. ஊரறிந்த உறுதியும் சடங்கும் மணப்பாதுகாப்பாம் என்பதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்