சொல் பொருள்
(பெ) எருமை, புலி, மான் போன்ற விலங்குகளின் ஆண்,
சொல் பொருள் விளக்கம்
எருமை, புலி, மான் போன்ற விலங்குகளின் ஆண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
male of animals like buffalo, tiger, deer etc.,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 138 ஆண்புலியை ஒத்த, குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன் வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து – நற் 186/5 வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து – நற் 330/1 அகன்ற கொம்புகளையுடைய எருமையின் சொரசொரப்பான பிடரியைக் கொண்ட கரிய ஆணானது, முதலை போத்து முழு_மீன் ஆரும் – ஐங் 5/4 ஆண் முதலையானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும் நீளிரும் பொய்கை இரை வேட்டு எழுந்த வாளை வெண் போத்து உணீஇய நாரை – அகம் 276/1,2 நீண்ட பெரிய பொய்கையில் இரையை விரும்பிப் புறப்பட்ட வெள்ளிய வாளைப் போத்தினை உண்ணும்பொருட்டு, நாரையானது பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து வாளை நாள் இரை தேரும் ஊர – அகம் 386/1,2 பொய்கைக்கண்ணுள்ள புலால் நாறும் பெரிய நீர்நாயின் ஆண் நாட்காலத்தே வாளையாய இரையினை ஆராயும் ஊரையுடைய தலைவ மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி – புறம் 364/4 கரிய ஆட்டுக்கிடாயை வீழ்த்து அதன் ஊனைத் தீயிலிட்டுச் சுட்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்