சொல் பொருள்
(இ.சொ) ஓர் உவம உருபு
சொல் பொருள் விளக்கம்
ஓர் உவம உருபு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a particle of comparison
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சோறு வாக்கிய கொழும் கஞ்சி யாறு போல பரந்து ஒழுகி ஏறு பொர சேறாகி தேர் ஓட துகள் கெழுமி நீறு ஆடிய களிறு போல வேறுபட்ட வினை ஓவத்து வெண் கோயில் மாசு ஊட்டும் – பட் 44-50 சோற்றை வடித்து வார்த்த கொழுமையான கஞ்சி ஆற்றுநீர் போல (எங்கும்)பரவி ஓடி, (அதைக் குடிக்க வந்த)காளைகள் தம்மில் பொருவதால் சேறாய் ஆகி, (அச் சேற்றின் மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து, புழுதியில் விளையாண்ட (அதனை மேலே அப்பிக்கொண்ட) ஆண்யானையைப் போல, பல்வேறுவிதமாக வரையப்பட்ட சித்திரங்களையுடைய வெண்மையான அரண்மனை(மதில்களை) அழுக்கேறப்பண்ணும்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்