சொல் பொருள்
1. (பெ.அ) போன்ற, போல இருக்கிற, 2. (வி.மு) போல இருக்கிறது,
சொல் பொருள் விளக்கம்
போன்ற, போல இருக்கிற,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
like
it is likely, it looks like
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன்னும் மணியும் போலும் யாழ நின் நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும் போதும் பணையும் போலும் யாழ நின் மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – நற் 166/1-4 பொன்னும் நீலமணியும் போன்ற உன் நல்ல மேனியும், மணங்கமழும் கரிய கூந்தலும்; பூக்கின்ற மலரும், மூங்கிலும் போன்ற உன் அழகிய மையுண்ட கண்களும், வனப்புள்ள தோள்களும் வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து எழுது எழில் உண்கண் பாவை அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நற் 177/8-10 வந்துவிட்டது போல இருக்கிறது, தோழி! மிகவும் நொந்துபோய் தீட்டிய அழகைக் கொண்ட மையுண்ட கண்களின் கண்மணிகள் கேடுவிளைவிக்கும் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தும் நாள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்