சொல் பொருள்
(வி) அறியாமைப்படு,
சொல் பொருள் விளக்கம்
அறியாமைப்படு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
assume ignorance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. அறிவு மடம்படுதல் அறிவு குறைந்தவர் முன்னே அறிந்தும் அறியாததுபோல் தன் அறிவைக் குறைவாகக் காட்டிக்கொள்வது. அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும் – சிறு 216 அறிவு குறைந்தோர் முன்னே அறிவு குறைவுபடுதலையும், (அறிஞர் மாட்டு)அறிவு நன்குடைமையும், 2. கொடை மடம்படுதல் – யாருக்குக் கொடுக்கிறோம் என்பதில் அறியாமைப்படுதல் வேண்டியோர், வேண்டாதவர், வலியோர், மெலியோர், புதியோர், பழையோர் எனக் கருதாது யாவருக்கும் கொடுத்தல் 3. படை மடம்படுதல் – யாருடன் போரிடுகிறோம் என்பதில் அறியாமைப்படுதல். வீரர் அல்லாதோர், புறமுதுகிட்டோர், புண்பட்டோர், மூத்தோர் எனக் கருதாது யாவரிடத்தும் போரிடல். அறிவு மடம்படுதலும், கொடை மடம்படுதலும் சிறந்தவை. படை மடம்படுதல் சிறந்ததன்று. பேகன் படை மடம்படான் என்கிறார் பரணர். கடாஅ யானை கழல் கால் பேகன் கொடை மடம்படுதல் அல்லது படை மடம்படான் பிறர் படை மயக்கு_உறினே – புறம் 142/4-6 மதம் மிக்க யானையும், கழல் அணிந்த காலும் உடைய பேகன் பிறர்க்குக் கொடை அளிக்கும்போது அறியாமையுடையவன், அதுவல்லது பிறர் படை வந்து போர்செயின் தான் அறியாமைப்படான்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்