சொல் பொருள்
(பெ) முழுமதிநாள், பௌர்ணமி,
சொல் பொருள் விளக்கம்
முழுமதிநாள், பௌர்ணமி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
full moon
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் எமதும் உண்டு ஓர் மதிநாள் திங்கள் – நற் 62/3-7 வெம்மையான கோடைக்காலம் நீடிய மூங்கில்கள் மிகுந்த காட்டுவழியில் குன்றினை நோக்கி ஊர்ந்துசெல்லும் முழுநிலவை நோக்கி, நின்று, அவளை நினைந்து மனத்துள் எண்ணிப்பார்த்தேன் அன்றோ நான்! முள் போல் கூர்மையான பற்களையும், திலகமிட்ட இனிய மணமுள்ள சிறப்பான நெற்றியையும் கொண்ட ஒருத்தியாக எம்முடையவளும் உண்டு ஒரு நிறைநாள் திங்கள்(போன்றவள்),
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்