1. சொல் பொருள்
(பெ) பறவை, மஞ்ஞை, தோகை, பீலி
2. சொல் பொருள் விளக்கம்
இவற்றில் ஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும்.
பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Peacock
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி – பொரு 47
மட கண்ண மயில் ஆல – பொரு 190
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய் – சிறு 16
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய் – சிறு 16
கரு நனை காயா கண மயில் அவிழவும் – சிறு 165
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி – சிறு 264
மயில் அகவும் மலி பொங்கர் – மது 333
மயில் இயலோரும் மட மொழியோரும் – மது 418
அன்னம் கரைய அணி மயில் அகவ – மது 675
மயில் ஓர் அன்ன சாயல் மாவின் – மது 706
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
மயில் இயல் மான் நோக்கின் – பட் 149
மயில் அறிபு அறியா-மன்னோ – நற் 13/8
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – நற் 115/5
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
இன மயில் மட கணம் போல – நற் 248/8
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர – நற் 262/2
கலி மயில் கலாவத்து அன்ன இவள் – நற் 265/8
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார் – நற் 301/4
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும் – நற் 305/2
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் – குறு 2/3
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – குறு 138/3
மென் மயில் எருத்தின் தோன்றும் – குறு 183/6
மயில் கண் அன்ன மாண் முடி பாவை – குறு 184/5
கலி மயில் கலாவத்து அன்ன இவள் – குறு 225/6
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் – குறு 244/5
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து – குறு 249/1
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு – குறு 264/3
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் – ஐங் 8/4
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/2
அணி மயில் அன்ன அசை நடை கொடிச்சியை – ஐங் 258/2
பழன காவில் பசு மயில் ஆலும் – பதி 27/8
திகழ் பொறி பீலி அணி மயில் கொடுத்தோன் – பரி 5/60
மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ – பரி 6/4
விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி – பரி 8/67
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல – பரி 9/41
மென் சீர் மயில் இயலவர் – பரி 9/56
மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர் – பரி 11/41
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ – பரி 15/40
வெண் சுடர் வேல் வேள் விரை மயில் மேல் ஞாயிறு நின் – பரி 18/26
மாறு கொள்வது போலும் மயில் கொடி வதுவை – பரி 19/7
மட மயில் ஓரும் மனையவரோடும் – பரி 19/21
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை – பரி 20/69
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது – பரி 23/64
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/13
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/6
தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் – கலி 33/18
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/2
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/15
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ – கலி 103/59
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன – கலி 108/38
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை – அகம் 63/15
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் – அகம் 69/14
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்/நனவு புகு விறலியின் தோன்றும் நாடன் – அகம் 82/9,10
கடு நவை படீஇயர் மாதோ களி மயில்/குஞ்சர குரல குருகோடு ஆலும் – அகம் 145/14,15
களி மயில் கலாவத்து அன்ன தோளே – அகம் 152/14
இள மழை சூழ்ந்த மட மயில் போல – அகம் 198/7
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி – அகம் 281/4
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து – அகம் 334/13
மயில்இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/6 ஆடு மயில் முன்னது ஆக கோடியர் – அகம் 352/4 காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 358/2 மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் – அகம் 368/7 கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல் – அகம் 369/4 காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 378/5 தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல் – அகம் 385/1 ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் – அகம் 385/14 நனவு-உறு கட்சியின் நன் மயில் ஆல – அகம் 392/17 மணி மயில் உயரிய மாறா வென்றி – புறம் 56/7 பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும் – புறம் 116/10 மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி – புறம் 120/6 மடதகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1
கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன – புறம் 146/8
இல் வழங்கு மட மயில் பிணிக்கும் – புறம் 252/4
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து – புறம் 264/3
மயில் அம் சாயல் மாஅயோளொடு – புறம் 318/2
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு – புறம் 373/10
மயில் அன்ன மென் சாயலார் – புறம் 395/13
மயில்இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/6
மயில்கள் ஆல குடிஞை இரட்டும் – ஐங் 291/1
மயில்கள் ஆல பெரும் தேன் இமிர – ஐங் 292/1
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும் – பரி 9/64
நன் மா மயிலின் மென்மெல இயலி – மது 608
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என – கலி 128/16
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் – கலி 137/6
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி – அகம் 158/5
மணியும் கயிறும் மயிலும் குடாரியும் – பரி 8/100
மெல்ல இயலும் மயிலும் அன்று – கலி 55/13
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/2
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல – பரி 9/41
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது