சொல் பொருள்
மரம் – ஒரறிவுயிராம் மரம்
மட்டை – மரத்தின் உறுப்பாகிய மட்டை.
சொல் பொருள் விளக்கம்
மட்டை என்பதும் மடல் என்பதும் ஒன்றே. தென்னை, பனை, வாழை, தாழை என்பவற்றிற்கு மட்டையுண்டு. இவை மர இனத்தைச் சேர்ந்தவையல்ல, புல்லினத்தைச் சேர்ந்தவை. எனினும் பிற்கால மக்கள் வழக்கில் இவை தென்னை மரம் பனை மரம் என்பன போலக் கொள்ளப்பட்டமையால் தேர்ந்த இணை மொழியாக ‘மரம்மட்டை’ வழங்குகின்றது. மரபு நிலை மாறிய வழக்கைத் தழுவியது இது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்