சொல் பொருள்
(பெ) மறுதாயம்,
சொல் பொருள் விளக்கம்
மறுதாயம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
casting a ‘one’ again in dice
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால் மறுவித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள் சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – கலி 136/13-16 நறிய மலர்கள் உதிர்ந்துகிடக்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது மறுதாயம் கிட்டியவன் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள், பிரிந்து போவேன் என்று அறிவித்து நீ பிரியக் கருதிய உன் பொருட்டாய் பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்