Skip to content

சொல் பொருள்

(பெ) அளவுக்கதிகமாய் உண்/குடி,

சொல் பொருள் விளக்கம்

அளவுக்கதிகமாய் உண்/குடி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

eat/drink excessively

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர் – புறம் 61/4-8

பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை
புதிய நெல்லினது வெள்ளிய சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு
விலாப்புடைப் பக்கம் விம்ம உண்டு
நெடிய கதிரையுடைய கழனியிடத்துச் சூட்டை இடுமிடமறியாது தடுமாறும்
வலிய கையையுடைய உழவர் புல்லிய தலையையுடைய சிறுவர்

தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம் – நற் 388/8,9

தேன் மணக்கும் தெளிந்த கள்ளைச் சுற்றத்தாரோடு நிரம்பக் குடித்து,
பெருமகிழ்ச்சிகொள்ளும் துறையைச் சேர்ந்தவனாகிய காதலன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *