Skip to content

சொல் பொருள்

(வி) 1. மாறிப்போ, 2. எதிராகு

சொல் பொருள் விளக்கம்

மாறிப்போ

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be changed, be opposed

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின்
மாறுபட்டு ஆங்கே மயங்குதி – கலி 91/19,20

நான் உன்னுடன் வேறுபட்டு நிற்கும்போது நெஞ்சு கலங்குகின்றாய்! உன் கைக்குள் அகப்பட்டுக்கிடந்தால்
மனம் மாறிப்போய் வேறு மங்கையர்பால் மயங்கித்திரிகின்றாய்!

நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் – மலை 241

ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக எட்டெடுத்துவைக்கும் காலடிகள் வழி மாறிப் போகலாவீர்

விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே
பூ போல் உண்கண் பொன் போல் மேனி
மாண் வரி அல்குல் குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே – குறு 101

விரிந்த அலைகளையுடைய பெரிய கடலால் சூழப்பட்ட இந்த உலகமும்,
மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும்,
இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இதற்கு ஒப்பாகமாட்டா –
பூப்போன்ற மைதீட்டிய கண்களும், பொன்னைப் போன்ற மேனியும்,
சிறப்பு மிக்க வரிகளைக் கொண்ட அல்குலும் உடைய தலைவியின்
தோள்கள் (தழுவுதலால்)மாறுபடும் நாளொடு எமக்கு-

தோள் மாறுபடுதலாவது ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும், ஒருவர் வலத்தோள் மற்றவர்
இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல். – உ.வே.சா உரை விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *