சொல் பொருள்
(பெ) 1. அந்திநேரம், 2. பூ, மணிகள் போன்றவை தொடுக்கப்பட்டது, 3. ஒழுங்கு, வரிசை, 4. இயல்பு, தன்மை,
சொல் பொருள் விளக்கம்
அந்திநேரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
evening, order, row, nature, quality, property
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாலை அன்னதோர் புன்மையும் காலை கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் – பொரு 96,97 (முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில் கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும், பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த பல் நூல் மாலை பனை படு கலிமா – குறு 173/1,2 பொன்னைப்போன்ற நிறமுடைய ஆவிரையின் புதிய பூக்களைச் செறித்துக் கட்டிய பலவாகிய நூல்களையுடைய மாலையை அணிந்த பனைமடலால் இயற்றிய குதிரையில் நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184 நூலால் சட்டத்தே கட்டின முத்துமாலையை உடைய கொற்றக்குடை வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79 வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய, அருவி தாழ் மாலை சுனை – பரி 8/16 அருவிநீர் தங்கும் வரிசையாக அமைந்த சுனை; முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் – நற் 58/6 முரசு இருக்கும் கட்டிலிடத்தே ஏற்றி வரிசையுற வைத்த விளக்கினைப் போன்ற மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல் வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/112-114 திங்களானது, மாலைக்காலத்து மயக்கந்தரும் இருளைக் கூட்டித்தள்ள, மதுரை நகருக்குள் தங்கும் இயல்பினை நினைத்து, அவ்விடத்தைவிட்டு நீங்கிப்போகும் செயலால், புதிய இயல்பினையுடைய நீராட்ட நாளுக்கான அணிகலன்களை நீக்கி, சிரிக்கும் இயல்பினையுடைய மலர்ந்த பூக்களைச் சூடிக்கொண்டு, குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை – கலி 9/4,5 ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே! வெப்பம் மிக்க இந்தக் காட்டு வழியில் செல்வதை இயல்பாகக் கொண்டு ஒழுகிநடப்பவர்களே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்