சொல் பொருள்
(பெ) மிகுதி, அதிகம்,
மிகுதி
குற்றம்
சொல் பொருள் விளக்கம்
மிகுதி என்னும் பொருளது மிகை. அதற்குக் குற்றம் என்னும் பொருள் காரியாபட்டி வட்டார வழக்கில் உள்ளது. “மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல்” என்றும் வள்ளுவம் மிகுதி என்பது குற்றத்தையேயாம். அளவை விஞ்சுதல் குற்றமாம். எதிலும் அளவு வேண்டும் என்பது நெறிமுறை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
excess
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது – பட் 210 (தாம்)கொள்வனவற்றை அதிகமாகக் கொள்ளாது, கொடுப்பனவற்றைக் குறையாகக் கொடாமல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்