சொல் பொருள்
(பெ) வண்டு, தேனீ,
சொல் பொருள் விளக்கம்
வண்டு, தேனீ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beetle, honey bee
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது எழுப்பும் ஓசை சீறியாழின் இசையைப் போல் இருக்கும். பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் – புறம் 308/1,2 பொற்கம்பியினை ஒத்த முறுக்கடங்கின நரம்பினையும் மின்னலைப்போலும் தோலினையும் வண்டிசை போலும் இசையினையுமுடைய சீறியாழ் சுவை மிக்க பழங்களின் நறுமணத்தால் அந்தப்பழங்களையும் மொய்த்திருக்கும் மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி – பதி 60/4,5 வண்டுகள் புறத்தே மொய்த்துநிற்கவும், இனிய சுவையில் மாறுபடாது, அரம்பத்தால் அறுக்கமுடியாத மரத்தில் உண்டாகிய சுவையான கனியாகிய தும்பி, வண்டு, மிஞிறு ஆகியவை வெவ்வேறானவை. வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர – பரி 8/23 விரும்புகின்ற தும்பியும், வண்டும், மிஞிறும் ஆரவாரிக்க, சுனைகளில் பூக்கள் மலர்ந்து நிற்க, நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத – கலி 33/22,23 யாழ் நரம்பின் இனிய இசையைத் தாளம் கெடாதவாறு நிறுத்த உதவும் குழலோசை போல் இனிதாய் இசைக்கும் தேனீக்களோடு தும்பிகளும் ஒலித்தபடியே தேனை அருந்த, இது நிறத்தில் காமனை ஒத்தது. காமன் நிறம் கருமை. மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் – கலி 26/3 சுறாமீன் கொடியைக் கொண்ட காமனின் நிறம் போன்ற வண்டுகள் மொய்க்கும் காஞ்சியும், யானையின் கன்னத்தில் (கவுள்) வடியும் மத நீரை (கடாம்) இவை மொய்க்கும். மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை – அகம் 159/16 மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள – அகம் 207/8 மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து – புறம் 22/6
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்