சொல் பொருள்
(பெ) 1. கண்டம், தொண்டை, குரல்வளை, 2. கழுத்து,
சொல் பொருள் விளக்கம்
கண்டம், தொண்டை, குரல்வளை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
throat, larynx, trachea
neck
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் தார் மிடற்ற செம் பூழ் சேவல் – அகம் 63/7 கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழின் சேவல் அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி காமரு தகைய கான வாரணம் – நற் 21/7,8 அரித்தெழும் குரலையுடைய தொண்டையினைக் கொண்ட அழகிய நுண்ணிய பலவான பொறிகளைக் கொண்ட காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல் படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/9 ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்