மின்மினி என்பது ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி
1. சொல் பொருள்
(பெ) ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி,
2. சொல் பொருள் விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Abscondita, Abscondita promelaena, firefly beetle
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி
சிறு பல் மின்மினி போல பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட – அகம் 202/2-8
மெல்லிய தலையினையுடைய இளைய பிடி இனத்துடன் இன்பமடைய
புலியாகிய பகையை வென்ற புண் மிக்க ஆண் யானை
கற்களை இடத்தே கொண்ட பக்க மலையில் கையை உயர்த்தி பெருமூச்செறிதலால்
வேங்கை மரத்தினது நல்ல கொத்துக்களிலுள்ள நறுமணமுடைய பூக்கள், கொல்லன்
துருத்தியை மிதித்து ஊதும் உலையில் பிதிர்ந்து எழும் தீப்பொறி போலப் பொங்கி எழுந்து
சிறிய பலவாய மின்மினிப்பூச்சிகளைப் போல பலவும் ஒருங்கே
நீலமணியின் நிறத்தின் ஒத்த பெரிய புதரில் பரவி விழும்
பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்து – நற் 44/10
பலவாக இருக்கும் மரங்களின் உயர்ந்த கிளைகளிலுள்ள மினிமினிகளின் வெளிச்சத்தில்
நிலம் படு மின்மினி போல பல உடன் – அகம் 67/16
நிலத்தில் ஊரும் மின்மினிப்பூச்சியைப் போல, பலவாக
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் – அகம் 72/3
மின்மினிப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருக்கும் முனைமுறிந்த வாயையுடைய புற்றினை,
சிறு பல் மின்மினி கடுப்ப எ வாயும் – அகம் 291/8
சிறிய பலவாகிய மின்மினிப்பூச்சிகளைப் போல எல்லா இடங்களிலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்