சொல் பொருள்
(பெ) 1. மென்மையான/இனிமையான பேச்சு, 2. மிழலைக்கூற்றம், சோழநாட்டின் ஒரு பகுதி,
சொல் பொருள் விளக்கம்
மென்மையான/இனிமையான பேச்சு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
soft/sweet talking, a section of the chozha country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மழலை அம் குறுமகள் மிழலை அம் தீம் குரல் – நற் 209/5 மழலைச் சொல் கொண்ட அழகிய இளமகளின் மென்மையான பேச்சான இனிய குரலை ஓம்பா ஈகை மா வேள் எவ்வி புனல் அம் புதவின் மிழலையொடு – புறம் 24/18,19 பொருளைப் பாதுகாவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக்கூற்றத்துடனே மிழலைக்கூற்றம் அல்லது மிழலைநாடென்பது சோழ நாட்டின் கடற்கரைப் பகுதியாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்