சொல் பொருள்
உச்சி, மலையுச்சி, முகப்பு, முன்பக்கம்,
சொல் பொருள் விளக்கம்
உச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
top, highest part, peak, summit, front side
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 246,247 உச்சியைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய, கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்; கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர் திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை – நற் 89/1-3 கீழைக் காற்றினால் செலுத்தப்பட்டு, விண்ணிடத்து ஒன்றுகூடிச் செறிந்து அலைகளின் பிசிர் போல மலையுச்சிகளில் மகிழ்ந்து ஏறி ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள் நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து திகை முழுது கமழ – பரி 10/73,74 அவர்கள் தம் முலையின் முன்பக்கத்தில் பூசிய சந்தனத்தின் மணம், மடைதிறந்த வெள்ளம்போல் திசைகள் முழுதும் கமழ, துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு – கலி 94/42,43 குற்றமற்ற அறிவினைக்கொண்ட அவையிலுள்ளோரின் ஓலைச்சுவடிக்கட்டின் முகப்பைக் கயிற்றினால் இறுக்கக் கட்டியதைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்