சொல் பொருள்
முக்கு – முட்டித் திரும்பும் இடம்.
முடங்கி – வளைந்து திரும்பும் இடம்.
சொல் பொருள் விளக்கம்
‘முக்கு முடங்கி’ தெருக்களில் உண்டு. நில புலங்களிலும் உண்டு. வளைந்து வளைந்து ஓடும் ஆறு ஒன்று ‘முடங்கியாறு’ என்னும் பெயருடன் விளங்குகின்றது. முடக்கம், முடம் என்பவை வளைவின் அடியில் வந்தவையே.
முக்கு என்பதை மூலை முடுக்கில் காண்க. முடங்கி – முடுக்கு எனவும் படும். வளைந்த நெற்பயிரை ‘முடந்தை நெல்’ என்பர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்