சொல் பொருள்
(பெ) தானியம் முதலியவற்றைப் புடைக்கப்பயன்படும் மூங்கில் தப்பையால் பின்னப்பட்ட தட்டு,
சொல் பொருள் விளக்கம்
தானியம் முதலியவற்றைப் புடைக்கப்பயன்படும் மூங்கில் தப்பையால் பின்னப்பட்ட தட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
winnowing pan
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சங்க இலக்கியங்களில் இச்சொல் நான்குமுறை வருகிறது. நான்குமுறையும் இது யானையின் காதுக்கு உவமமாகவே வருகிறது. முறம் செவி யானை தட கையின் தடைஇ – நற் 376/1 முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி – கலி 42/2 முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து —————————– ——————————————————- அதன், நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/1-4 முறம் செவி யானை வேந்தர் – புறம் 339/12
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்