சொல் பொருள்
முல்லைமாறி – களமாக்கி விடுபவன்
சொல் பொருள் விளக்கம்
முல்லை என்பது வளமிக்க காட்டு நிலம். அக்காட்டு வளநிலை மாறி மழையற்று வறண்டு போனால் பாலை எனப்படும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து, நல்லியல் பழிந்து போனால் பாலை எனப்படும் என்பார் இளங்கோவடிகளார். அவர்தம் இலக்கணக் குறிப்பைப் பொது மக்கள் மிக எளிமையாக ‘முல்லை மாறி’ என்பதால் வழங்குகின்றனர். வளமான வாழ்வைப் பாலையாக்குபவனை முல்லைமாறி என்று வசை கூறுவர். முல்லை மாறி ‘மொல்லை மாறி’ என உலகவழக்கில் இக்காலத்தில் வழங்குகின்றது.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்