சொல் பொருள்
பழைமையான ஊர்,
சொல் பொருள் விளக்கம்
பழைமையான ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ancient town
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மூதூரில் விழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். கொடிகள் அசையும் அகன்ற கடைத்தெருக்கள் இருக்கும். நகருக்குக் காவல் பலமாக இருக்கும். நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201 புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும் விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் – பெரும் 411 விழாக்களால் மேம்பட்ட பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய தொன்மையான ஊராகிய காஞ்சி நகர் அரும் கடி மூதூர் மருங்கில் போகி – முல் 7 அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய் மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 29,30 மாடங்கள் உயர்ந்துநிற்கும் வளப்பமுள்ள பழைய ஊரில், ஆறு கிடந்தால் போன்ற அகன்ற நெடிய தெருவில், துஞ்சா முழவின் மூதூர் வாயில் – குறி 236 செயலற்று இராத(எப்போதும் ஒலிக்கும்) முழவினையுடைய பழைய (நம்)ஊர் வாயிலில் சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு – பட் 215 திருவிழா நிகழும் பழைமையான ஊருக்குச் சென்று குடியேறினாற்போன்று, நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/4 நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின் ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் – நற் 90/1 ஆட்டங்களைக் கொண்ட திருவிழாவின் ஆரவாரம் உள்ள பழமையான ஊரில், விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – நற் 293/4 திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த மூதூரில் பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/10 பெருத்த ஆரவாரத்தையுடைய நமது பழமையான ஊரின் மரங்கள் தெரிகின்றன விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்து – பதி 15/18,19 விழாக்கள் இல்லாமல் இருப்பதை அறியாத, முழவுகள் முழங்கும் மூதூர்களில் கொடிகளின் நிழலில் இருக்கும் பொன்னை மிகவும் உடைய கடைத்தெருக்களில் முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/20 முழவுகள் முழங்குகின்ற பழமையான ஊரில் விழாவினைக் காண்பதற்காகச் செல்லுகின்ற, விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – அகம் 17/19 திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில் நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – அகம் 83/7 நீண்ட கொடிகள் அசையும் அங்காடிகளையுடைய பழைமையான ஊரில் அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/12 அணுகுதற்கு மிக்க காவலினையுடைய பகைவர்க்கு அச்சத்தைத் தரும் மூதீர் அழியா விழவின் அஞ்சுவரு மூதூர் – அகம் 115/1 என்றும் நீங்காத விழாவினையுடைய பகைவர்க்கு அச்சம் தரும் இம் முதிய ஊரின்கண்ணே செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர் – புறம் 37/11 செம்பு பொருவும் மதிலையுமுடைய தலைமை பொருந்திய பழைய ஊரினுள்ளே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்