1. சொல் பொருள்
உடல், உண்மை
2. சொல் பொருள் விளக்கம்
- உடல்; மெய்யுணர்வு (ஊறு). ‘பொய்’ என்னாராய்ப், பொய்யாய் ஒழியும் உடல் எனினும், தன்னையுடையான் புகழுக்கு இடனாகி உலகு ஒழியினும் ஒழியா நிலைபேற்றை வழங்கி நிலைபெறுத்தும் மாண்பு கருதி ‘மெய்’என்றார்.
- மெய்யெழுத்து அல்லது புள்ளி எழுத்து.
- உண்மை – “யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற” – திருக். 300
- நிலைபேறு; மெய்யுடல் (அ) புகழுடல்
- ஆள். “இந்நெல் தண்ட வந்தார்க்கு மெய்கண்டு சோறு கொடுப்பதாகவும்” மெய் = ஆள் எண்ணிக்கை. தெ.க.தொ.8:5
3. மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
body, truth
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8 (தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக் கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க – பொய் படுபு அறியா கழங்கே மெய்யே மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250 பொய்கூறுதலை அறியாத கழங்குகளே! உண்மையே! நீலமணி போன்ற மலையைப் புகலிடமாகக் கொண்ட இள மயில்கள் ஆடிக்கொண்டிருக்கும் நம் விரிந்த வள்ளிக்கிழங்குகள் உள்ள அழகிய கானத்திற்கு உரியவன், ஆண்தகைமை உள்ள வெற்றி சிறக்கும் முருகவேள் அல்லன் – இவளின் பூண் விளங்கும் இளமையான முலைகளை நோயுறச் செய்தவன்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்