சொல் பொருள்
மைந்தன் என்பதன் பன்மை
சொல் பொருள் விளக்கம்
மைந்தன் என்பதன் பன்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the plural of the word mainthan
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மகளிர் கோதை மைந்தர் புனையவும் மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் - பரி 20/20,21 மகளிர் சூடிக்கொள்ளும் மரபினவாகிய மாலையை ஆராயாமல் ஆடவர் அணிந்துகொள்ளவும், ஆடவரின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும் - பொ.வே.சோ.உரை மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் மகளிர் கோதை மைந்தர் மலையவும் - பட் 109,110 கணவர் சூடிய கண்ணியைத் தமது கோதையாக நினைத்து மகளிர் சூடிக்கொள்ளும்படியாகவும் மகளிர் சூடிய கோதையைத் தமது கண்ணியாக நினைத்து மைந்தர் சூடிக்கொள்ளும்படியாகவும் - நச்.உரை மாறா மைந்தர் மாறுநிலை தேய முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ அரைசு பட கடக்கும் ஆற்றல் புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே - பதி 34/9-12 அறத்துறை மாறாத வீரரது வலியானது கெடுமாறு முரசு முழக்கிச் செய்யும் பெரிய போர்க்களத்தே நெருங்கியவழி ஆரவாரம் உண்டாக பகை மன்னர் தம்வலி முற்றவும் அழியப்பொருது வென்றி பெறும் ஆற்றலால் உயர்வமைந்த வலியினை உடையோனே நீ நின் தானையைப் பாதுகாப்பதினால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்