சொல் பொருள்
மொத்தல் – நிலப்பரப்பெல்லாம் களைசெம்மிக் கிடத்தல்.
மொதவல் – நிலத்துச் செம்மியத்துடன் கிளைத்துத் தழைத்துப் பயிரையும் மூடிக் கிடத்தல் மொதவலாம்.
சொல் பொருள் விளக்கம்
மொத்தப் பரப்பையும் கவர்வதால் ‘மொத்தல்’ எனவும், முதைத்துக் கிடத்தலால் மொதவல் எனவும் சொல்லப்பட்டதாம். களை’ மொத்தல் மொதவல்’லாகக் கிடக்கிறது; பயிரை எழுந்திருக்க விடவில்லை என்று வருந்துதலும், களையெடுத்தலும் வேளாண்மைத் தொழில் சார்ந்தவை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்