Skip to content

சொல் பொருள்

(பெ) உடம்பு,

சொல் பொருள் விளக்கம்

உடம்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

body

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313

கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி

புல்லென் யாக்கை புலவு வாய் பாண – பெரும் 22

பொலிவழிந்த உடம்பினையும் புலவு நாறும் வாயினையுமுடைய பாணனே

வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 61

வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,

பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 260

பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கிச்செல்லவும்

கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி – மலை 311-313

(குட்டியைக்)கையில் பிடிப்பதை மறந்த கரிய விரலையுடைய மந்தி,
எளிதாய் அணுகமுடியாத பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் (தாவுதலை முற்றிலும்)கற்றுக்கொள்ளாத குட்டிக்காக
தளிர்களை மேய்ந்து (வளர்ந்த) உடம்பினையுடைய சுற்றத்தோடே கூடிநின்று

நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு – பதி 19/14

நாணம் மிகுந்த உடம்பும், ஒளி திகழும் நெற்றியும் கொண்ட உன் மனைவிக்கு

கழை தின் யாக்கை விழை களிறு தைவர – அகம் 328/13

மூங்கிலைத் தின்னும் தன் உடம்பினை தன்பால் விருப்பமுற்ற தன் ஆண் யானை தடவிக்கொண்டிருக்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *