சொல் பொருள்
(பெ) 1. திருமணம், 2. மண மாலை,
சொல் பொருள் விளக்கம்
திருமணம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
marriage, marriage garland
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/38,39 “விண்ணைத் தொடுகின்ற மலைநாட்டைச் சேர்ந்தவனும், நீயும், திருமணத்தின்போது முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நடந்துகொள்வீர்களோ? வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் – மலை 30 மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), (மொய்க்கும்)வண்டுகளும் மணம்வீசும் கூந்தலினையுடைய வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117 தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்