Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வீரர், படைத்தலைவர், திண்ணியர், 2. வேட்டுவர், கானவர்,

சொல் பொருள் விளக்கம்

வீரர், படைத்தலைவர், திண்ணியர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strong man; valiant man, man of robust build, Commander, hunters

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒண் பொறி கழல் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/3,4

ஒளிரும் புள்ளிகளையுடைய கழல் அணிந்த கால் முன்வைத்ததைப் பின்னால் எடுக்காத வீரர்கள்
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு

பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து – மலை 547

போரிடும் பகைவரை எதிர்கொள்ளும் படைத்தலைவர்களோடே (முகம்)மலர்ந்து,

கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின் – நற் 276/1-3

கொம்புகளை ஊதியவாறு, வேட்டையைப் பற்றிக்கொள்ளும் வாயையுடைய நாயுடன்
காட்டில் வேட்டையைத் தேடி, தளைர்ச்சியுற்ற வலிமையான விலங்குகளை வேட்டையாடும்
வேட்டுவரின் பெண்கள் என்று எம்மைச் சொல்வாயாயின்,
– ஔவை.சு.து.உரை, விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *