சொல் பொருள்
(வி.அ) 1. இடந்தோறும், 2. முறைமுறையாக, மாற்றிமாற்றி, அடுத்தடுத்து,
சொல் பொருள் விளக்கம்
இடந்தோறும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
in every place
alternately, one after another
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா_மாவின் வயின்வயின் நெல் ————– ————————— கூடு கெழீஇய குடி வயினான் – பொரு 180-182 ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் – —————————– ——————- – கூடு பொருந்தின வளமிக்க குடியிருப்புகளில், வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர் – சிறு 163 உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்: வகை சால் உலக்கை வயின்வயின் ஓச்சி – கலி 40/5 சிறப்புப் பொருந்திய உலக்கைகளை மாற்றி மாற்றிக் குற்றி வயின்வயின் உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே – புறம் 77/8-10 முறை முறையாக வெகுண்டு மேல்வந்த புதிய வீரரை மதித்தலும் அவமதித்தலும் இலன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்