Skip to content

வரகு என்பது ஒரு வகைத் தானியம்.

1. சொல் பொருள்

(பெ) ஒரு வகைத் தானியம்.

2. சொல் பொருள் விளக்கம்

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Common millet, Paspalum scrobiculatum, Kodo Millet

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வரகரிசி பூளைப் பூவைப்போல் இருக்கும். இது விளையும் தாவரம் குட்டையாக இருக்கும்.

நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 192,193

நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை,
– வரகு நெற்பயிர் போல் ஓங்கி வளராமையின் குறுந்தாள் என்றார் – பொ.வே.சா விளக்கம்

முல்லை நில மக்கள் தங்கள்வீட்டுக் கூரைகளை வரகுத்தாள்களால் வேய்வர்

ஏனல் உழவர் வரகு மீது இட்ட
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை – பதி 30/22,23

தினைப்புனத்தை உழுது வாழும் குறவர்கள், வரகுத்தாள்களை மேலே வேய்ந்த,
மணம் மிக்க காட்டு மல்லிகை வளர்கின்ற, வலிய நிலத்தைச் சேர்ந்த, மனைகளில்

வரகு விளைந்தபின், அதனை அறுத்து, நிலத்தை உழுது கொள்ளை விதைப்பர்

வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை – பதி 75/11

வெள்ளை வரகுக்குப் பின் உழுது விதைத்துப் பெற்ற கொள்ளும் உடைய களர்நிலம் ஆகி,

மா புதல் சேர வரகு இணர் சிறப்ப - ஐங் 496/1

ஏனல் உழவர் வரகு மீது இட்ட - பதி 30/22

வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை - பதி 75/11

வாலிதின் விளைந்த புது வரகு அரிய - புறம் 120/9

புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் - புறம் 322/3

வரகு கடன் இரக்கும் நெடுந்தகை - புறம் 327/7

வரகும் தினையும் உள்ளவை எல்லாம் - புறம் 328/3

வரகும் தினையும் உள்ளவை எல்லாம் - புறம் 333/9

வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் - புறம் 392/10

குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி - பெரும் 193

வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்/திரி மருப்பு இரலையொடு மட மான் உகள - முல் 98,99

கரும் கால் வரகின் இரும் குரல் புலர - மது 272

அரலை தீர உரீஇ வரகின்/குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ - மலை 24,25

இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்/கவை கதிர் கறித்த காமர் மட பிணை - நற் 121/2,3

பழ மழை கலித்த புது புன வரகின்/இரலை மேய்ந்த குறை தலை பாவை - குறு 220/1,2

செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த - குறு 282/1

களை கால் கழீஇய பெரும் புன வரகின்/கவை கதிர் இரும் புறம் கதூஉ உண்ட - அகம் 194/9,10

முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு - அகம் 284/3

கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள் - அகம் 359/13

கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின்/மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை - அகம் 367/6,7

கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண் - அகம் 384/6

கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி - அகம் 393/5

இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு - அகம் 394/3

புறவு கரு அன்ன புன்புல வரகின்/பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி - புறம் 34/9,10

புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் - புறம் 197/12

கவை கதிர் வரகின் அவைப்பு-உறு வாக்கல் - புறம் 215/1

கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் - புறம் 321/6

சில் விளை வரகின் புல்லென் குப்பை - புறம் 327/2

வன்-பாலான் கரும் கால் வரகின்/அரிகால் கருப்பை அலைக்கும் பூழின் - புறம் 384/4,5

இரும்பு கவர்வு-உற்றன பெரும் புன வரகே/பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு - மலை 113,114

கரும் கால் வரகே இரும் கதிர் தினையே - புறம் 335/4

கரும் கால் வரகின் பொரி போல் அரும்பு அவிழ்ந்து - கார்40:25/1

மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார் - 4.மும்மை:5 43/3

வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் - திருப்:800/3

நெல்லொடு சாமை வரகு செந்தினையும் நீண்ட கோதும்பையும் இறுங்கும் - சீறா:4458/1

கவை கதிர் வரகும் கார் பயில் எள்ளும் - உஞ்ஞை:49/105

கொய் பூம் தினையும் கொழும் புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும் - மது: 11/81,82

வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின் - சிந்தா:5 1196/2

அருவி ஐவனம் கரும்பும் அடக்கரும் கவை கதிர் வரகும்
உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உளவே - சிந்தா:7 1561/3,4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *