சொல் பொருள்
(வி) வறண்டுபோ, (பெ) 1. நீர் அற்ற இடம், 2. மணற்பாங்கான இடம்,
சொல் பொருள் விளக்கம்
வறண்டுபோ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become dry, dried up place, sandy soil
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன சேவலாய் சிறகர் புலர்த்தியோய் – பரி 3/25,26 பெரிய வானத்திலிருந்து நிற்காமல் வழிகின்ற மழைநீர் வறண்டுபோகும்படி, அன்னத்தின் சேவலாய்ச் சிறகுகளால் உலரச் செய்தவனே வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 195 நீர் அற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும், படல்கின்ற பகன்றையினையும் வறள் அடும்பின் மலர் மலைந்தும் – பட் 65 மணற்பாங்கான இடத்தின் (அங்கு வளரும்)அடப்பம் பூவைத் தலையிலே கட்டியும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்