Skip to content

சொல் பொருள்

(பெ) காய்ந்தது,

வற்றல் – மெலிவு

சொல் பொருள் விளக்கம்

ஈரப்பசை வற்றிப் போதலால் ‘வற்றல்’ ஆகும். மிளகாய் வற்றல், மிதுக்கு வற்றல், கொத்தவரை வற்றல் எனப் பல வகை. வற்றலைக் கொண்டு வைக்கும் குழம்பும் வற்றக் குழம்பு எனப்பட்டது. பின்னர் காய்கறிகளைப் போட்டு வற்றக் காய்ச்சப் பட்ட குழம்பும் வற்றக் குழம்பு ஆயிற்று. காயப்போடுமுன் இருந்த அளவிலும் எடையிலும் காய்ந்த பின் உள்ள அளவும் எடையும் குறைந்து போதலால் வற்றலுக்கு ‘மெலிவு’ என்னும் பொருள் உண்டாயிற்று. மெலிந்தவனை வற்றல் என்பது வழக்கு. மெலிபவரை வற்றுகிறார் என்பதும் வழக்கே. “அது ஒரு வற்றல்;என்ன சாப்பிட்டாலும் அதன் உடம்பு அதுதான்” என்பது உடலாய்வுக் குறிப்பு.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

That which is withered, shrunk or dried up

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/1,2

வெப்பமிக்க வலிமையுடைய கடும் காற்று சோலைக்குள் நுழைந்ததாக
நெற்றாக முதிர்ந்த வாகையின் வற்றல்கள் ஆரவாரிக்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்.

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *