சொல் பொருள்
(வி) 1. வெற்றியுண்டாகு, 2. வலப்பக்கமாகச் செல்,
சொல் பொருள் விளக்கம்
வெற்றியுண்டாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be victorious, pass from left to right
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலம்பட நடக்கும் வலி புணர் எருத்தின் உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 189,190 வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால் மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய வலம்படு முரசின் வெல் போர் வேந்தன் – புறம் 304/9 வெற்றியுண்டாக்கும் முரசினையும் வெல்லும் போரையுமுடைய வேந்தன் துளங்கு நடை மரையா வலம்பட தொலைச்சி – அகம் 3/7 அசைந்தாடும் நடையைக் கொண்ட மரையா மானை வலப்பக்கம் வீழ்த்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்