சொல் பொருள்
(வி.எ) வழுக்கி, வழுவி – என்பதன் சொல்லிசை அளபெடை,
சொல் பொருள் விளக்கம்
வழுக்கி, வழுவி – என்பதன் சொல்லிசை அளபெடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
having slipped
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட மாலை போல் தூங்கும் சினை – கலி 106/26-29 காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்தி எடுத்த கொத்தான குடல்களைத் தொங்கவிட்டவாறே தூக்கிக்கொண்டு பறந்த பருந்துகளின் வாயிலிருந்து வழுக்கி விழ, அவை ஆலமரத்தின் மேலும், கடம்ப மரத்தின்மேலும் தெய்வங்களுக்கு அணிவிப்பதற்காகப் போடப்பட்ட மாலையைப் போல தொங்கிக்கொண்டிருந்தன மரக்கிளைகளில்; தான் தவம் ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர் உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர் உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு – கலி 139/33-36 தான் தவ முறையிலிருந்து விலகி, விண்ணுலகம் செல்லும் நெறியில் வழுவி, பெரியோர் உயர்நிலைக்கு உரியவன் என்று எண்ணிய ஓர் அரசனை, மீண்டும் நல்வழியில் ஈடுபடுத்தி, அந்தப் பெரியோர் அவனைப் பேரின்ப உலகம் சேர்ப்பதைப் போன்று,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்