Skip to content
வழை

வழை என்பது சுரபுன்னை மரம்

1. சொல் பொருள்

(பெ) சுரபுன்னை

2. சொல் பொருள் விளக்கம்

  • யானை விரும்பும் தழைமரம்.
  • வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.
  • குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து
  • ஆய் அண்டிரனின் குடிப்பூ
  • நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வளரும்
  • தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்தது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

long-leaved two-sepalled gamboge, Ochrocarpos longifolius,

Hindi: सुरंगी surangi • Kannada: ಸುರಿಗೆ surige, ಸುರುಗಿ surugi • Konkani: सुरांगन surangan • Marathi: रानउंडी raanundi, सुरंगी surangi • Oriya: churiana • Telugu: సురపొన్న suraponna

வழை
வழை

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும். எனவே, இதனைக்

கொங்கு முதிர் நறு வழை’

எனக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது.

கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை – குறி 83,84

வெண்கோடற்பூ, தாழம்பூ, தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ

இந்த மரம் மலைப்பாங்கான இடங்களில் வளரும்.

வழை அமை சாரல் கமழ துழைஇ – மலை 181

சுரபுன்னை மரங்கள் வளர்ந்துநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி கிளறி,

கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை/காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் - குறி 83,84

வழை அமை சாரல் கமழ துழைஇ - மலை 181

வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் - நற் 222/7

வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து - குறு 260/6

வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் - பதி 41/13

பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து - பரி 11/66

அகரு வழை ஞெமை ஆரம் இனைய - பரி 12/5

வழை வளர் சாரல் வருடை நன் மான் - கலி 50/21

வறன்-உறல் அறியாத வழை அமை நறும் சாரல் - கலி 53/1

கழை அமல் சிலம்பின் வழை தலை வாட - அகம் 177/7

வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் - அகம் 328/1

வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் - புறம் 131/2

கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு/வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் - அகம் 8/8,9

கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி - புறம் 158/21

மதி தள்ளி இடும் வழை சூழ் பொழிலே - சிந்தா:5 1194/4

குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை
விரவு பூ பொழில் வேறு இருந்து ஆய் பொருள் - சிந்தா:8 1918/2,3

வழை உறை வனத்து வன்கண் நரி வலைப்பட்டது அன்றே - சிந்தா:8 1928/4

வண் தளிர் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி - சிந்தா:5 1225/1

வரையே புனலே வழையே தழையே - சிந்தா:5 1376/2

வனம் ஆர் வழையே வரையே திரையே - சிந்தா:6 1519/2

மணி மலர் நாகம் சார்ந்து வழையோடு மரவ நீழல் - சிந்தா:7 1569/3

கரை கிடந்த மா வழை மகிள் சண்பகம் கமழ் கா - தேம்பா:29 98/2
வழை
வழை
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் - 1.திருமலை:2 29/1

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் - 1.திருமலை:5 94/1

வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும் - திருப்:536/7

வழை சேர் வாழையும் கழை சேர் கானமும் - உஞ்ஞை:46/277

வழை அமல் முன்றிலொடு வார் மணல் பரப்பி - இலாவாண:15/3

வருக்கையும் மாவும் வழையும் வாழையும் - உஞ்ஞை:50/23

வழையும் வாழையும் கழையும் கால் கீண்டு - உஞ்ஞை:51/48

வழையும் வாழையும் கழை வளம் கவினிய - இலாவாண:12/16

வழை முதல் மரன் எலாம் மடிப்ப மா தவன் - பால-மிகை:7 12/3

வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு - கிட்:10 33/1

வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் - யுத்1:9 10/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *