சொல் பொருள்
தள்ளி இருத்தல்
வாங்கி இருத்தல் உள்வாங்கி இடம்விட்டு இருக்கச் செய்தலாம்.
சொல் பொருள் விளக்கம்
நெருங்கலாக அமர்ந்திருக்கும்போது அந்நெருக்கத்தைத் தளர்த்தும் வகையால் அகன்று அல்லது தள்ளியிருக்கச் சொல்வது வழக்கம். அகத்தீசுவர வட்டாரத்தில் தள்ளி இருத்தலை வாங்கியிருத்தல் என்பர். வாங்கி இருத்தல் உள்வாங்கி இடம்விட்டு இருக்கச் செய்தலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்