சொல் பொருள்
(பெ) மணம்,
சொல் பொருள் விளக்கம்
மணம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fragrance, odour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார் சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட நீடிய வரம்பின் வாடிய விடினும் கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும – குறு 309/1-6 களையெடுக்கும் மாந்தர் தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக வண்டுகள் மொய்ப்பதினால் மலர்ந்த மலரின் மணம் நிலத்தில் படும்படி நீண்ட வரப்பில் வாடும்படி போட்டுவைத்தாலும் கொடியவரின் நிலத்தைவிட்டு வேறு நிலத்துக்குப்போய் வாழ்வோம் என்னாமல் எடுத்துப்போட்டும் தம்மைக் களைந்த கழனியில் பூக்கும் உனது ஊரின் நெய்தலைப் போன்றவள் நான், தலைவனே! ஓசனை கமழும் வாச மேனியர் – பரி 12/25 நெடுந்தொலைவுக்கு மணம் வீசும் வாசமுள்ள மேனியரும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்