சொல் பொருள்
வாட்டம் – செழிப்பின்மை, வருந்துதல், வழிதல்
வாட்டம் – நீர்வாட்டம்
வாட்டம் – பசி, வாடுதல்
சொல் பொருள் விளக்கம்
பயிர் வாட்டமாக இருக்கிறது என்றால் நீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது என்பது பொருள். முட்டுப்பாடும் தட்டுப்பாடும் நோய் நொடியாக வருந்துபவனை ‘வாடி விட்டான்’ என்றும், வாட்டி எடுத்து விட்டது என்றும் சொல்வது வழக்கு. வருந்துதல் பொருளது இவ்வாட்டம். “நீர் வாட்டம் பார்க்கா விட்டால் ஒழுகிவிடும்” என வீட்டு முகடுகளை ஒழுங்குபடுத்துவது கட்டட இயல். இது வழிதல் பொருளது. முதல் ஒன்றும் தவிர்ந்தவை வழக்குப் பொருள்களாம்.
வாடிப்போதல் எனப்படும் வாட்டம் வேறு. இது நீர் வழியும் சரிவு எனப்படும் வாட்டமாகும். மனையில் தளம் போடும் போது, அதனைக் கழுவி விடும் நீர், தானே வடிந்து வெளியேறும் வகையில் சாய்தளமாக அமைப்பது வாட்டம் எனப்படும். நீர்வாட்டம் என்பர். இது கொத்தர் வழக்கு.
வாட்டம் வாடுதல், நீரோட்டம், சரிவு என்று பலவகைப் பொதுப் பொருள் தரும் சொல். அது பசி என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் உள்ளது. பசி தானே வாட்டத்தை உண்டாக்குவது. நீரில்லாப் பயிர் வாடுதலும் அதுதானே.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்