Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அம்பு, 2. அம்பின் முனையிலுள்ள பற்கள்,

வாளி – தென்னை, பனை ஆயவற்றின் ஓலையின் ஊடுள்ள ஈர்க்கை வாளி. காதிலும் மூக்கிலும் போடும் அணி, வளையம்

சொல் பொருள் விளக்கம்

தென்னை, பனை ஆயவற்றின் ஓலையின் ஊடுள்ள ஈர்க்கை வாளி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். மூக்கு, காது ஆகியவற்றைக் குத்தி அதன் துளை தூர்ந்து (மூடிப்) போகாமல் இருப்பதற்கு ஈர்க்குத் துணுக்கை விடும் வழக்கத்தில் இருந்து வாளி என்பது வநிதிருக்கும். வாளி என்பது காதிலும் மூக்கிலும் போடும் அணி, வளையம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

arrow, the pointed teeth at the head of an arrow.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செம் கோல் வாளி கொடு வில் ஆடவர் – நற் 164/6

செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்

அரம் போழ் நுதிய வாளி அம்பின் – அகம் 67/5

அரத்தினால் அராவப்பட்ட முனையையுடைய பற்களையுடைய அம்பின்
– வாளி அம்பு – எயிற்றம்பு – ந.மு.வே.நாட்டார் உரை விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *