Skip to content

சொல் பொருள்

(வி) 1. கேள்விகேள், 2. விசாரி,  3. சொல்வதைக் கேள், செவிமடு, 

சொல் பொருள் விளக்கம்

கேள்விகேள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ask, enquire, listen to, pay attention to

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நும் கோ யார் என வினவின் எம் கோ
இரு முந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச்சென்று
கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி – பதி 20/1-5

உம்முடைய அரசன் யார் என்று கேட்பீராயின், எமது அரசன்
கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த,
அவனுடன் முரண்பட்டோரை எதிர்த்துச் சென்று,
அவரின் காவல் மரமான கடம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்த மிக்க சினமும், வலிமையும் கொண்ட
நெடுஞ்சேரலாதன் ஆவான்; வாழ்க அவன் சூடியிருக்கும் தலைமாலை

அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி
சென்மோ வாழி தோழி – நற் 365/4,5

அகன்ற வயல்களையும் தோட்டங்களையும் உடைய அவனது ஊருக்கு வழிகேட்டுப்
போவோமா? வாழ்க, தோழியே!

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை
காயாமை வேண்டுவல் யான் – கலி 82/4-7

தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக”;
“சொல்கிறேன், விரும்பிக்கேட்பது போல் கேட்டு அதன் பின்னே
வெகுளாதிருக்க வேண்டுகிறேன் நான்”

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *