Skip to content

சொல் பொருள்

(பெ) 1. செயல், தொழில், 2. தொழில்திறம், வேலைப்பாடு, கைத்தொழில், 3. போர், 4. மேற்கொண்ட செயல், 5. இப்பிறப்பில் இன்ப,துன்பங்களுக்குக் காரணமான முற்பிறப்பில் செய்த செயல், நல்வினை தீவினை என இருவகைப்பட்ட பூர்வகருமம்,

சொல் பொருள் விளக்கம்

செயல், தொழில்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Act, action, deed, work, workmanship, craftsmanship, Efficiency or skill, as in an art or craft, war, work on hand, Karma, as the accumulated result of deeds done in former births

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ
செய் .வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275

முலை படர்ந்த கல்லின் மேலாக ஏறி நின்று
கண்டு வருவோம், செல்வோம் தோழி!
மாலையில் ஊர்வந்து சேரும் காளையையுடைய பசுவினங்களின்
புல்லை உண்ட நல்ல பசுக்கள் பூண்டிருக்கும் மணியோசையோ?
செய்யக் கருதிய கருமத்தை முடித்த மனநிறைவான உள்ளத்தோடு
வலிய வில்லையுடைய இளைஞர்கள் தன் இருபக்கமும் பாதுகாக்க,
ஈரமான மணலையுடைய காட்டாற்றுப்பக்கம் வரும்
தேரின் மணியோசையோ? அங்கு ஒலிப்பனவாக உள்ளவற்றை

யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101

யவனர் பண்ணின தொழில் மாட்சிமைப்பட்ட பாவை
– வினை மாண் பாவை – தொழில் திறத்தால் மாட்சிமைப்பட்ட பாவை

தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது – முல் 18-20

பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)போர்வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி),

ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169

நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலைப் பயின்ற யானையின்

வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே – அகம் 47/2,3

இவ்விடத்தில் வந்த வேலையை முடித்தோமென்றால், மிகவும் விரைவாக
எழுவாயாக, நெஞ்சே நீ வாழ்வாயாக

கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான்
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும் – கலி 21/10,11

தமக்குரியவர் இவர்தான் என்றுகொள்ளாமல், செல்வமானது
அவரவரின் பழைய நல்வினை, தீவினைகளையொட்டி ஆள்விட்டு ஆள் மாறிச் சென்று தங்கியிருக்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *