சொல் பொருள்
(வி) 1. கல, 2. கட்டு, பொருத்து, 3 பரந்திரு
சொல் பொருள் விளக்கம்
1. கல,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mix, mingle, blend, bind, be joined, be spread
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ – அகம் 212/14 பல மொழியும் கலந்த பாசறையைத் தான் வேண்டுமிடங்களில் அமைத்து நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27 செறிவைக் கொண்ட மேற்பகுதியையுடைய, (பலவிதமாய்க்)கலந்த பூக்களுள்ள அகன்ற பொழில்கள் இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47 இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர், – வரி விரவு கச்சு என மாறுக. பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள் வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 70-72 (ஆறலைப்போர்)எய்த கணைகளின் வலியைத் தொலைத்த புண்கள் தீர்ந்த மார்பினையும்; (மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள் மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க, – பொ.வே.சோ.உரை – விரவு வரிக் கச்சு என்றதனை, வரி விரவிய கச்சு என மாறிக் கோடலுமாம். இந்தப் பொருள் எந்த அகராதியிலும் காணப்படவில்லை. செய்யுள் உரைகளினின்றும் பெறப்படுகிரது. இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47 இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர், – வரி விரவு கச்சு என மாறுக. – இனி, வாள் விரவிய கச்சு, வரிக்கச்சு எனினுமாம். வாள் விரவுதலாவது வாளைச் சேரக் கட்டின என்றவாறு. வரிக் கச்சு – வரிந்து கட்டின கச்சென்க. பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள் வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 70-72 (ஆறலைப்போர்)எய்த கணைகளின் வலியைத் தொலைத்த புண்கள் தீர்ந்த மார்பினையும்; (மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள் மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க, – பொ.வே.சோ.உரை – விரவு வரிக் கச்சு என்றதனை, வரி விரவிய கச்சு என மாறிக் கோடலுமாம். இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும், விரவுக்குரிய முதல் பொருளும் ஒத்துவரக் காண்கிறோம். இந்தப் பொருளும் எந்த அகராதியிலும் காணப்படவில்லை. செய்யுள் உரைகளினின்றும் பெறப்படுகிரது. நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய் அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை – அகம் 25/1,2 நீண்ட கரையினைக் கொண்ட காட்டாற்றின் வேகம் மிக்க நீர் அற்றொழிய விளங்கும் அறலாம் தன்மை கொண்ட விரவிய மணலையுடைய அகன்ற துறையிடத்துள்ள – விரவிய மணலையுடைய – நாட்டார் உரை – மணல் பரந்த – மாணிக்கம் உரை. – பரந்த மணல் – செயபால் உரை – மணல் பரந்த – ந.சி.கந்தையா உரை – பரந்து கிடக்கின்ற மணல் – பொ.வே.சோ.உரை – விரவு மணல் – வந்து கலந்த மணலுமாம்.- பொ.வே.சோ.உரை விளக்கம் – விரவுக்குரிய பொருள் – 1 – விரவு மணல் – mixed sand – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு – விரவுக்குரிய பொருள் – விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் – அகம் 108/12 புள்ளிகள் விரவிய மயிலைக் கண்டு அஞ்சி – நாட்டார் உரை – புள்ளிகள் விரவிக்கிடக்கும் – புலி. உரை – விரவிய புள்ளிகளையுடைய – பொ.வே.சோ.உரை – விரவு பொறி மஞ்ஞை – peacock with spread spots – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்